கண்டவை...கேட்டவை...ரசித்தவை...

வரவேற்கிறோம் வந்தியத்தேவன்இந்த வலைப்பூவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பதிவு.இந்த வலைப்பூவில் சரியான இடைவெளிகளில் எங்களால் கட்டுரைகள் வெளியிட முடியவில்லை.இந்த நிலையில்,இணையதளம் மூலம் எனக்கு அறிமுகமான என் நண்பர் ஒருவர் இந்த வலைப்பூவில் எழுத ஆர்வம் காட்டினார்.அவரை தனிப்பட்ட முறையிலும் நன்கு அறிவேன்.அவர் பெயர் வந்தியத்தேவன். ஆம்,வல்லவரையன் வந்தியத்தேவனே தான்.சோழ சாம்ராஜ்ஜியத்திற்கு எதிரான சூழ்ச்சியை முறியடிப்பதில் பெரும் பங்கு வகித்தவர் வந்தியத்தேவன். 'கல்கி' அவர்களின் பொன்னியின் செல்வன் மூலம், மிகவும் துடிப்பும் துள்ளலும் மிக்க ஒரு வீரன் என அறியப்படுபவர் தான் வந்தியத்தேவன். அதே சமயம் சுத்த வீரனாகவும், நேர்மை மிகுந்தவராகவும், நன்றியுள்ளவராகவும், உண்மையான நண்பராகவும் - காதலராகவும் கூட அறியப்படுபவர். அவர் பதிவுகளும் அவரைப்போலவே துள்ளளுடனும் துடிப்புடனும் இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.தற்சமயம் அவரைப்பற்றி இந்த அளவு தகவல்களே போதுமானதென கருதுகிறோம்.விரைவில் அவர் இந்த வலைப்பூவில் தனது பதிவுகளை எழுதுவார் என எதிர்பார்க்கலாம்.

One Response so far.

  1. வந்தியதேவனை வரவேற்கிறோம். அவர் பதிவுகள் இவ்வலைப்பூவை மேலும் மெருகேற்றும் என்று நம்புகிறோம். முதல் பதிவை எதிர்நோக்குகிறோம். வாழ்த்துக்கள் ! நமது உலாவிற்கு வரவேற்கிறோம்.

    -நன்றி
    விஷ்ணு