கண்டவை...கேட்டவை...ரசித்தவை...

ஒரு அறிமுகம்


நண்பர்களே, பொது கருத்துக்களங்களின் முக்கிய நோக்கமே கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது தான்.தாய்மொழியில் தான் ஒருவனுடைய சிந்தனைகள் இயல்பாக அமையும்.அதனால்,முழுக்க முழுக்க தமிழிலேயே கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த வலைப்பூவைத் தொடங்குகிறோம்.தொடங்குகிறோம் என்றால் பன்மை ஆயிற்றே?ஆம்,இந்த தளத்தில் எழுத என் நண்பர்கள் சிலரும் சம்மதித்துள்ளனர்.நாங்கள் எங்கள் கருத்துக்களை தனித்தனி தளங்களில் பதிந்து வருகிறோம்.இங்கு வெளியிடப்படும் கருத்துக்கள் அவரவர் தனிப்பட்டக் கருத்துக்களே. ஒருவர் கருத்தை மற்றவர் ஏற்க வேண்டுமென்கிற கட்டாயமில்லை.இது வாசகர்களுக்கும் பொருந்தும்.எங்களுடைய கருத்துக்களை வாசகர்கள் ஏற்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை.இங்கு பதியப்படும் கருத்துக்களுக்கு வாசகர்கள் தங்களின் எதிர்ப்புகளை தாராளமாக காட்டலாம்.

நான் ,( http://dream---life.blogspot.com/ ) இந்த தளத்தில் எனது கருத்துக்களை பதிந்து வருகிறேன்.நண்பர் விஷ்ணுவர்த்தனன், (http://vishnu24.blogspot.com/) , இந்த தளத்தில் தன்னுடைய கருத்துக்களைப் பதிந்து வருகிறார்.இன்னும் இரண்டு நண்பர்களும் எழுதவிருக்கிறார்கள்.அதில் ஒருவர் பெண் எழுத்தாளர்.விரைவில் அவர்களைப் பற்றி மற்றொரு பதிவில் குறிப்பிடுகிறேன்.

சரியான இடைவெளியில் இங்கே பதிவுகள் பதியப்படுமேயானால், பலவிதமான பதிவுகளைக் காணலாம். ஆன்மிகம்,அரசியல்,சினிமா,கற்பனை என பலவிதமான பதிவுகளும் காணலாம்.

- ஹரிஷ். 

3 Responses so far.

 1. Vishnu says:

  இந்த யோசனையை முதலில் முன்வைத்து இப்படி ஒரு பதிவை தொடங்கலாம் என என்னை அழைத்தைமைக்கு நண்பர் ஹரிஷ்க்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.ஆயிரம் ஆங்கிலத்தில் எழுதி உலகை சென்றடைந்தாலும் நாம் தமிழில் எழுதவில்லையே என்ற குறை எப்போதும் இருக்கவே செய்தது.மேலும் கற்பனை வளத்துக்கும் மொழிக்கும் சம்பந்தம் இல்லை என நிரூபிக்கவும் தமிழில் எழுத ஒரு சரியான தளத்தை,மேடையை எதிர் பார்த்திருந்தேன்.அது இப்போது வீதி உலா ரூபத்தில் அமைந்துள்ளது.
  வாசகர்களே,என் நண்பர்களுடுனும்,உங்களுடனுமான இந்த உலா ஒரு நல்ல பயணமாக அமையும் என நம்புகிறேன்..உங்கள் ஒத்துழைப்பையும்,ஆதரவையும் இந்த தள பங்களிப்பாளர்களின் சார்பாக வேண்டுகிறேன்..

  நன்றி
  -விஷ்ணு

 2. Kris says:

  மகிழ்ச்சி! நிறைய எழுதுங்கள். உங்கள் பதிவு வெறும் உலா வழிகாட்டியாக இல்லாமல், வாழ்வின் நிதர்சனங்களை தரிசிக்கும் பதிவுகளாகவும் கருத்தாழம் மிகுந்தும் இருக்கட்டும்.

 3. Harish.M says:

  Kris - வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! கருத்தாழம் மிக்கப் பதிவுகளைத் தருவதே எங்கள் நோக்கமும் கூட!! எங்கள் முயற்சி எத்தனை தூரம் வெற்றி அடைகிறதென்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!!! கருத்துக்களுக்கு மிக்க நன்றி !!!