கண்டவை...கேட்டவை...ரசித்தவை...

தொடரும் கூடங்குளம் போராட்டம் - சில தகவல்கள்




நண்பர்களே நான் முன்பே ஒரு முறை இந்த வலைப்பூவில் கூடங்குளம் போராட்டத்தைப் பற்றி ஒரு சிறிய கட்டுரை எழுதினேன்.அப்போதே இந்த போராட்டத்தின் மீது எனக்கிருந்த சந்தேகத்தை வெளிப்படுத்தினேன்.இந்த போராட்டக்காரர்கள் ஏதோ உள்நோக்குடன் செயல்படுகிறார்கள் என்ற எனது சந்தேகத்தை வெளிப்படுத்தினேன். சமீப காலாமாக சில கட்டுரைகளைப் படித்தும்,போராட்டக்காரர்களின் நடவடிக்கைகளைக் கவனித்தும் வந்த பிறகு தான் இந்த பதிவை எழுதுகிறேன்.

இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு கூடங்குளம் போராட்டத்தின் நூறாவது நாள் என புதிய தலைமுறை தொலைகாட்சியில் ஒரு செய்தி தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது.வர்த்தக ரீதியாக தோல்வியடைந்த சில திரைப்படங்கள் நூறாவது நாள் விழ கொண்டடுவதைப் போல்,அர்த்தமற்ற இந்த போராட்டமும் நூறு நாட்களுக்கும் மேல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

நிபுணர் குழு ஒன்றை அரசு நியமித்து இந்த அணு மின் நிலையத்தின் நிறை குறைகளை குறித்த நேர்மையான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அரசு உத்தரவிட வேண்டுமென்று நமது முந்தைய கட்டுரையில் தெரிவித்திருந்தோம். ஆனால் மாநில அரசைத் தான் விமர்சனம் செய்திருந்தோம்.இப்போது மத்திய அரசு ஒரு படி மேலே போய் நிபுணர் குழு ஒன்றை நியமித்து அவர்களைக் கூடங்குளத்துக்கே  அனுப்பி மக்களின் கேள்விகளுக்கு விடயளிக்கும்படி செய்துள்ளது.ஆனால் எந்த விளக்கமளித்தாலும் திருப்தி அளிக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் கூறி வருகிறார்கள்.

அப்துல் கலாம் போன்ற கற்றறிந்த விஞ்ஞானிகள் உத்திரவாதமளித்த பிறகும் கூட இவர்கள் திருப்தி அடையவில்லை என்று கூறுவது ஒன்றைத் தான் உணர்த்துகிறது.இந்த போராட்டக் குழு செய்வது விதண்டாவாதம் என்பது தான் அது. உதயகுமார் மற்றும் அவரை ஆதரிக்கும் ஒரு கூட்டம் அப்துல் கலாம் அவர்கள் ஒன்று அணு சக்தி விஞ்ஞானி இல்லையே அவருக்கு எப்படி இந்த அணு உலை பாதுகாப்பானதா இல்லையா என்று தெரியும் என கேட்கிறார்கள். அப்படியானால் இந்த போராட்டத்திற்கு தன்னைத் தானே தலைவன் என்று அறிவித்துக் கொண்டுள்ள உதயகுமார் என்பவர் யார்? அவர் என்ன அணு சக்தி விஞ்ஞானியா அல்லது வேறு என்ன விஞ்ஞானி?

இந்த போராட்டத்தில் தலைவர் என்று சொல்லிக் கொள்பவர்களின் பெயர்களைப் பார்ப்போம்.உதயகுமார், புஷ்பராயன் மற்றும் மைபா ஜேசுராஜன்.இதில் புஷ்பராயன் என்பவர் கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து இல்லற வாழ்க்கைக்கு வந்தவர்.ஜேசுராஜன் என்பவர் கத்தோலிக்க பாதிரியாராக இருக்கிறார்(செய்தி : நவம்பர் 24,தினமலர்).சரி இந்த உதயகுமார் என்பவரைப் பற்றியும் சில தகவல்களை பார்ப்போம்.உதயகுமார் தற்போது இடிந்தகரையில் ஜெயகுமார் எனும் பாதிரியாருடன் தங்கி வருகிறார்.அந்த பாதிரியார் இந்த போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவிப்பவர்(இவை ஊடகங்களில் வந்த செய்தி).இந்த உதயகுமார் அமெரிக்காவில் ஹிந்து மதத்தை விமர்சித்து/எதிர்த்து புத்தகங்களை எழுதியவர்.இவர் ஒரு மதமாற்றம் செய்யப்பட கிறிஸ்தவர் என்று கூறுகிறது விக்கிப்பிடியா இணைப்பு (http://en.wikipedia.org/wiki/S._P._Udayakumar).இப்படி முழுக்க முழுக்க கிறிஸ்தவர்களே இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதன் நோக்கமென்ன?கிறிஸ்தவ தேவாலயங்கள் இந்த போராட்டத்தை வெளிப்படையாக ஆதரிக்கின்றன. இது போன்ற விஷயங்களில் பாதிரியார்களும் தேவாலயங்களும் பங்கு கொள்வது ஏன்? உண்மையைச் சொன்னாள் இவர்கள் பங்கு கொள்ளவில்லை இவர்கள் தான் போராட்டத்தைத் தூண்டிவிட்டு இன்றளவும் அது தொடர காரணமாய் இருக்கிறார்கள்.

இவர்கள் இந்தப் போராட்டத்தை இத்தனை நாட்கள் நடத்துவதற்கு போதுமான நிதியுதவி எங்கிருந்து கிடைக்கிறது? சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவின் போராட்டத்திற்கு பன்னாட்டு நிறுவனங்கள் பணப் பட்டுவாடா செய்ததாகக் கூறப்படுகிறது.அப்படிப் பட்ட போராட்டத்தையே தொடர்ந்து நடத்த இயலவில்லை,ஆகா இந்த கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது?

இந்தியாவில் உள்ள 22 அணு உலைகளில் Nuclear Suppliers Group(NSG) என்றழைக்கப்படும் சர்வதேச அமைப்பின் மேற்பார்வைக்கு உட்பட்டது. மீதமிருக்கும் 8 உலைகளுள் இந்த கூடங்குளம் அணு உலையும் ஒன்று. மேலும் இந்த அணு உலைப் பொறுத்த வரையில் நமது வர்த்தகம் முழுவதும் ரஷிய நாட்டுடன் தானே தவிர அமெரிக்காவுடன் இல்லை.(17 நவம்பர் தினமணி மற்றும் 15 நவம்பர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களில் குருமூர்த்தி அவர்களின் கட்டுரையைப் படிக்கவும்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் : http://expressbuzz.com/biography/Forces-halting-our-n-surge/333225.html

இதில் மற்றொன்றை நாம் கவனிக்க வேண்டும்.மத்திய அரசு இந்த நிபுணர் குழுவை நியமித்ததன் காரணம் என்ன? அங்குள்ள மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டுமென்பதற்காகத் தான் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு போராடுபவர்கள் மத்திய அரசிடமிருந்து தங்கள் சந்தேகங்களைக் கேட்க போராடவில்லை.அவர்கள் போராட்டமே இந்த உலையே கூடாது என்பதற்காகத் தான்.அதி புத்திசாலித்தனமாக நிபுணர்களை மடக்குவதாக நினைத்து அவர்கள் கேட்கும் சில கேள்விகளை பார்ப்போம்.

நாட்டின் பாதுகாப்பு, ரகசிய விவரங்கள் சார்ந்த கேள்விகள்
1. அணு உலை அமைந்துள்ள இடம்
2. அணு உலையின் தொழில்நுட்ப வடிவமைப்பு விவரம்
3. அணு உலையின் செயல்திறன் அறிக்கை
4. எரிபொருள் நிரப்புவது எப்படி?
5. யுரேனிய எரிபொருள் வாங்கும் முறை; எங்கிருந்து வாங்கப்படுகிறது
6. எரிபொருட்களை கொண்டு வரும் பாதைகள் மற்றும் போக்குவரத்து குறித்த விவரம்
7. தண்ணீர் எங்கிருந்து எடுக்கப்படுகிறது. அதன் பாதைகள் குறித்த விவரம்
8. அணு கழிவுகள் அகற்றுதல் மற்றும் கையாளும் தொழில்நுட்பம்
9. அணு மறு சுழற்சி குறித்த விவரம்
10. அணு மறு சுழற்சி நிலையம் குறித்த விவரம்
11. குளிர்நீர் வெளியேற்றும் தொழில்நுட்பம்
12. மன்னார் வளைகுடா பகுதிக்கான பாதுகாப்பு
13.மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளுக்கான பாதுகாப்பு
14.பயங்கரவாத அச்சுறுத்தல் தடுப்பு நடவடிக்கை
15. இத்திட்டத்தால், சீனா, இலங்கை, மாலத்தீவு, பாகிஸ்தான் நாடுகள் இடையிலான நட்புறவு மாற்றம் குறித்த விவரம்
16. எரிபொருளுக்கான கனிம சுரங்கங்கள், அதை தோண்டுவதால் ஏற்படும் விளைவுகள்
17. ரஷ்யா - இந்தியா இடையிலான நட்புறவு ஒப்பந்த விவரம்
18. ராணுவ கண்காணிப்பு விவரம்
19. அணு உலையின் தொழில்நுட்ப விவரம்
மற்றும் அதற்கான மொத்த செலவு விவரம்
20. கடல் பாதுகாப்பை பலப்படுத்துவது எப்படி?
21. கடல் வழி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு விவரம்
22. ராணுவம் பணியமர்த்தப்படும் பகுதிகள் எவை?
23. மீதமுள்ள நான்கு உலைகள் கட்டுவதற்கான ஒப்பந்த விவரம்
24. அணு எரிபொருள் வழங்கும் நாடுகளிடையேயான ஒப்பந்த விவரம்
25. ஆயுதங்கள் தயாரிக்கப்படுமா என்பது குறித்த விவரங்கள்

"அணு உலையின் தொழில்நுட்ப வடிவமைப்பு விவரம்","ராணுவ கண்காணிப்பு விவரம்","ரஷ்யா - இந்தியா இடையிலான நட்புறவு ஒப்பந்த விவரம்" இத்யாதி போன்ற கேளிவிகள் எல்லாம் இவர்களுக்கேதற்கு. மேலும் அதிர்ச்சி தரும் ஒரு தகவலையும் மத்திய குழுவின் தலைவர் திரு.முத்துநாயகம் வெளியிட்டிருக்கிறார்.அதாவது போராட்டக்காரர்கள் கூடங்குளம் அணு உலை குறித்த வரைபடத்தைக் கேட்கிறார்கள் என்பது தான் அது( இந்த இணைப்பைப் படியுங்கள் : http://tamil.oneindia.in/news/2011/11/18/koodankulam-plant-is-extremely-safe-expert-team-aid0128.html). இது எல்லாம் இவர்களுக்கெதற்கு? இதை இவர்கள் அந்நிய நாட்டிற்கு விற்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?இந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் மூலமாக அந்நிய நாட்டவர்கள் இந்த அணு உலை முடக்கப் பார்க்கிறார்கள் என்பது தான் நமக்குத் தோன்றும் கருத்து.

கல்பாக்கம்,தாராபூர்,கார்வார் போன்ற இடங்களில் அணு மின் நிலையங்கள் இயங்கிக்கொண்டு தான் இருக்கின்றன. போபால் சம்பவத்தை இந்த அணு மின் நிலையத்துடன் ஒப்பிடுபவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள்.போபால் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் வடிவமைப்பு அமெரிக்கத் தரத்துக்கு இல்லை என்பது அதை அனுமதிக்கும் முன்பே அரசுக்கும் அந்த நிறுவனத்தின் தலைவர் வேரன் ஆண்டர்சன்னுக்கும் முன்பே தெரியும் என்று செய்திகள் கூறுகின்றன .மேலும் விஷவாயு சிறிய அளவில் வெளியேறத் தொடங்கியபோதே கொடுக்கப் பட்ட எச்சரிக்கையினை அலட்சியம் செய்து விட்டது அப்போது இருந்த அரசு.மேலும் அந்த நிறுவனம் தொடங்குவதற்கு முன்பு இத்தனை ஆராய்ச்சிகளும் இவ்வளவு நிபுணர்களும் விளக்கமோ உத்திரவாதமோ வழங்கவில்லை.கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் தொழில்நுட்பம் எப்படி என்றால்,சுனாமியோ அல்லது பூகம்பமோ ஏற்பட்டால் அணு உலை தானே நின்று விடும்.அதனால்(அணு உலையினால்) எந்த பாதிப்பும் ஏற்படாது.மக்கள் அச்சப்படும் பொதுவான விஷயமான கதிர்வீச்சுத் தாக்குதல்களும் ஏற்படாமல் இருக்கும்படித் தான் இந்த அணு உலை அமைந்துள்ளதாக நிபுணர் குழு தெரிவிக்கிறது.

எந்தக் கதிர்வீச்சும் வெளிவரப் போவதில்லை..எரிபொருள் நிரப்பப்படும் யூனிட்டே பல அடுக்கு பாதுகாப்பில் தான் வைக்கப்பட்டுள்ளது.இதையும் தாண்டி அந்த உலையில் உட்புரச்சுவர் ஆறு மில்லி மீட்டர் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ப்ளேட்டுக்களால் கவர் செய்யப்பட்டுள்ளது.அதற்கும் வெளியே நான்கு அடி கான்க்ரீட் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட பின்பும்,இதை விளக்கிய பிறகும் கூட ஆர்பாட்டக்காரர்கள் தொடர்ந்து போராடுவது,இந்த உலை எப்படியாவது செயல்படாமல் தடுத்து விட வேண்டுமென்கிற அவர்களது என்னத்தைத்தான் காட்டுகிறது.



அப்துல் கலாம் அவர்கள் பார்வையிட்டு,இது பாதுகாப்பான உலை என்று கருத்துத் தெரிவித்தப் பிறகு,உதயகுமார் புதிய தலைமுறையில் பேட்டிக் கொடுத்தார்.மத்திய அரசு போலி விஞ்ஞானிகளை வைத்துத் தங்கள் போராட்டத்தை முடக்கப் பார்க்கிறதென்று.அவர் அப்துல் கலாம் அவர்களை நேரடியாகச் சொல்லவில்லை.இந்த அணு மின் நிலையத்தை ஆதரிப்போர் அனைவரும் போலி விஞ்ஞானி என்று எண்ணிச் சொன்னாரோ என்னவோ.வந்தவர்கள் எல்லாம்(கலாம் அய்யா உட்பட)போலி விஞ்ஞானிகள் என்றால்,யார் தான் உண்மை விஞ்ஞானி? உதயகுமார் தானோ? இந்த போராட்டத்திலும் விளம்பரம் தேடிக்கொள்ள வழக்கம் போல புறப்பட்டு விட்டார்கள் திருமாவளவனும் வைகோவும்.மருத்துவர் அய்யா திரு ராமாதாசு அவர்கள் ஒரு படி மேலே சென்று கல்பாக்கம் அணு மின் நிலையத்தையே மூட வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியிருக்கிறார். இவர்கள் இப்படித்தான்,விடுங்கள் இவர்களைப் பற்றி விமர்சனம் செய்ய பிறகொரு நகைச்சுவைப் பதிவு எழுதுகிறேன்.

நண்பர்களே,நான் ஏதோ ஒரு குறிப்பிட்ட பத்திரிக்கையோ அல்லது தொலைக்காட்சி செய்தியையோ பார்த்து விட்டு இந்தக் கட்டுரையை எழுதவில்லை.சில பத்திரிக்கைகள்,சில தொலைக்காட்சி செய்திகள்,சில நிபுணர்களின் விளக்கங்கள்,சில அறிஞர்களின் கட்டுரைகள் போன்றவற்றஎல்லாம் படித்து விட்டுத் தான் இதை எழுதுகிறேன். நான் படித்தவற்றுள் சிலவற்றுக்கான இணைப்பை இந்த கட்டுரையிலும் குறிப்பிட்டுள்ளேன்.

மேலும் இந்தக் கட்டுரையை எழுதுவதால் எனக்கு தனிப்பட்ட லாபமென்று எதுவுமில்லை. ஆனால் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் பாதிரியார்களுக்கும் நேற்று முளைத்தத் தலைவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் பல விதத்திலும் லாபம் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன. அதை விட முக்கியம் இந்த அணு உலை மூடப்பட்டால் நமக்கு பலத்த நஷ்டம் ஏற்படப் போவது நிச்சயம்.நான் இந்த அணு மின் நிலையத்தை கட்டுவதற்காக செலவிடப் பட்ட பணத்தைச் சொல்லவில்லை.இந்த அணு மின் நிலையத்தின் மூலம் நமக்கு 925 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.இது மூடப்பட்டால் அது நமக்கு கிடைக்காது. மேலும் இந்த அணு மின் நிலையத்தை எதிர்த்துப் போராடுவது தேசத்துரோகமாகும்.இந்தப் போராட்டக்காரர்களையும் இவர்களுக்கு உதவும் கிறிஸ்தவ தேவாலயங்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டும்.அணு உலை விரைவில் செயல்படத் தொடங்க வேண்டும்.இது தான் நமது கருத்து.

20 Responses so far.

  1. Kris says:

    நீங்கள் எழுதியிருப்பதை பார்த்தால் நம் நாட்டில் தேசபக்தியை போல அப்துல்கலாம் பக்தியும் பரவலாக இருப்பதுபோல் தெரிகிறது. உங்களின் முந்தய பதிவிற்கு பின்னூட்டமாக நானிட்ட கருத்துக்களுக்கு உங்கள் பதிலென்ன? கிறிஸ்துவ மதத்தினருக்கும் பின்னணியில் இருப்பவர்க்கும் உள்நோக்கங்கள் இருக்கலாம், இருந்தாலும் அதைவிட எதிகாலசந்ததியிற்கு நாம் விட்டுசெல்லும் விஷயம் என்ன என்பது முக்கியம். கிறிஸ்துவ மதம் மட்டும் இருப்பதென்பது உங்களின் புனைவு, மேலும் அதனை நிரூபிக்க வேண்டும். தினமலரெல்லாம் ஒரு தரமான பத்திரிகை எனும்போது சிரிப்புத்தான் வருகிறது. தயவு செய்து நடுநிலையாக அனைத்து தரப்பு வாதங்களையும் அறிந்து எழுதுங்கள். மேலும் கருணாநிதி போல ஒரு விஷயம் எதிர்கபடவேண்டுமேன்றால் உடனே எதிராளியின் குலம் கோத்திரம் தோண்டுவதும் கதை கட்டுவதும் வேண்டாம் அத்துதான் உண்மையில் பார்ப்பனீயம்.

  2. Harish.M says:

    உங்கள் கருத்துக்கள் உதயகுமார் சொல்வதைப் போல அணு விபத்து ஏற்பட்டால் பல தலைமுறைகள் தலையெடுக்க முடியாது என்பது மட்டும் தான்.விபத்து ஏற்படாத வகையில் அணு மின் நிலையம் அமைக்கப் பட்டிருக்கிறது என்று நிபுணர் குழு நிருபிக்கின்றது.மேலும் அணு உலையின் வரைபடத்தைக் கேட்கும்போதே இந்த போராட்டக்காரர்களின் லட்சணம் தெரிகிறது.அப்துல் கலாம் பக்தி பரவியிருக்கிறதோ இல்லையோ இப்போது அவரை ஒன்றும் தெரியாதவர் என்றும் அவரைப் பற்றி பல தரக்குறைவான மலிவான விமர்சனங்கள் வருகின்றன.உதயகுமார் என்னவோ தமிழினப் போராளி என்பது போல் சித்தரிக்கப் பட்டுள்ளது.கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் கதிர்வீச்சால் மக்கள் பாதிக்கப் படுவதாக வதந்திகள் கிளப்பப் படுகின்றன.தினமலர் பத்திரிக்கையின் கருத்தை நாம் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால் அவர்கள் கொடுத்திருக்கும் செய்தி நூறு சதவிகிதம் உண்மையானது.

  3. Harish.M says:

    கருணாநிதி அரசியல் ஆதாயத்திற்காக ஜாதி மதம் போன்றவற்றை விமர்சிப்பவர்.ஆனால் இங்கு நான் பதிந்திருப்பது எந்த ஆதாயத்திற்காகவும் அல்ல.மீண்டும் மீண்டும் சுனாமி,நிலா அதிர்வு,அணு விபத்து,கதிர் வீச்சு ஆபத்து என்று சொல்லியே போராட்டத்தை தொடர்வதை நம்ப நான் தயாராக இல்லை.இதோ இந்த இணைப்பைப் பாருங்கள்,எத்தனைப் பத்திரிக்கைச் செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளதென்று.

    http://devapriyaji.wordpress.com/2011/11/13/dr-s-p-udaykumar-koodankulam/

    மேகாலயத்தில் யுரேனியம் வெட்டி எடுப்பதற்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் இருப்பது அங்கு பெரும்பான்மையாக உள்ள கிறிஸ்தவ அமைப்புகளும், அதைச் சார்ந்தவர்களும்தான். 1990-ம் ஆண்டு முதல் இன்றுவரை ஒரு கிலோகிராம் யுரேனியம்கூட வெட்டி எடுக்கப்படவில்லை. இங்குள்ள அமைப்புகள், மாணவர்களை ஆர்ப்பாட்டத்துக்குத் தூண்டி, மறியல், பேரணி நடத்தி வருவதுடன் வன்முறை மூலம் அரசு நிர்வாகத்தை சீர்குலைத்து வருகின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பழங்குடியினரும், கிறிஸ்தவ தேவாலயங்களின் பின்னணியில் செயல்படும் சேவை நிறுவனங்களும் போராட்டத்தில் ஈடுபட்டு, யுரேனியம் வெட்டி எடுக்கத் தடையாக இருக்கின்றன.

    இது தினமணியில் குருமூர்த்தி எழுதியது. இணைப்பு - http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=508102&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!

  4. Harish.M says:

    இந்த போராட்டம் உணர்த்தும் உண்மை ஒன்றே ஒன்று தான் - உறக்கத்தில் இருப்பவனை எழுப்பி விடலாம்,உறக்கத்தில் இருப்பதைப் போல் நடிப்பவனை எந்த காலத்திலும் எழுப்ப முடியாது என்பது தான் அது. இதற்கும் மேல் அணு விபத்து ஏற்படுமா அல்லது சுனாமி தாக்கும என்று அச்சப் படுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் விருப்பம்.பல பத்திரிக்கைகள் நீங்கள் சொல்வது போன்ற கருத்துக்களைத் தான் எழுதி வருகின்றன,நாம் எழுதியது மிக சில பத்திரிக்கைகளில் தான் வந்துள்ளன.அவற்றை திரட்டி அணு மின் நிலையத்தை ஆதரிப்பவர்கள் பக்கத்து நியாயத்தை சுட்டி காட்டி இருக்கிறேன்.அணு மின் நிலையத்தில் பணி புரிபவர்களிடமும் பேசி வருகிறேன்.தேவையான அளவு தகவல்கள் கிடைத்ததும் மீண்டும் ஒரு பதிவும் எழுதவிருக்கிறேன்.இங்கு நாம் எழுதிய அத்தனையும் எவராலும் மறுக்க முடியாத உண்மை.

  5. Harish.M says:

    கிறிஸ்துவ மதம் மட்டும் இருப்பதென்பது உங்களின் புனைவு, மேலும் அதனை நிரூபிக்க வேண்டும்.

    இன்னும் எப்படி நிரூபிக்க வேண்டுமென்று சொல்கிறீர்கள்?அங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் தவறு என்று சொல்கிறீர்களா?இந்த செய்தியைப் பற்றி மதிப்பிற்குரிய உதயகுமார் அவர்களே கண்டனம் தெரிவித்து விட்டாரே,அதாவது தினமலர் அவர்களின் பெயர்களையும் தொலைபேசி எங்களையும் கொடுத்து விட்டதால் அவர்களுக்கு மிரட்டல்கள் வருகின்றனவென்று.இது ஒன்று போதுமே அந்த செய்தி(அங்கு போராடுபவர்களின் பெயர்கள்) உண்மை என்று நிருபிப்பதற்கு.மேலும் சில இணைப்புகளையும் கொடுத்துள்ளேன் அதுவும் கூட கிறிஸ்தவ அமைப்புகள் பின்புலத்தில் இருப்பதை குறிப்பிடுகின்றன.

    தினமலரெல்லாம் ஒரு தரமான பத்திரிகை எனும்போது சிரிப்புத்தான் வருகிறது.

    தினமலரின் தரத்தைப் பற்றி இங்கு நாம் பேசவே இல்லை.அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு செய்தியை மட்டும் தான் எடுத்துக்காட்டாக குறிப்பிட்டுள்ளோம்.

  6. Harish.M says:

    Kris - நீங்கள் பொறுமையாக நேரம் கிடைக்கும்போது இந்த பதில்களைப் படித்து விட்டு உங்கள் கருத்துக்களைப் பதியலாம்.தொடர்ந்து கருத்துக்களைப் பதிந்து வருவதற்கு மிக்க நன்றி.:-)

  7. Kris says:

    உதயகுமாரின் 2007 பேட்டி:
    http://www.youtube.com/watch?v=IyWaopOvmC4
    காலம் கடந்த மக்கள் ஒருங்கிணைப்பு - காரணம் சொல்லப்பட்டுள்ளது.
    ஒரு சிறுமியின் பேட்டி:
    http://www.youtube.com/watch?v=phDvwbGU4N0&feature=player_embedded

    (1990 ஆம் ஆண்டு வெளிவந்த “புத்தர் சிரித்தார்” நூலில் இருந்து)

    http://pamaran.wordpress.com/2011/10/11/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/
    http://pamaran.wordpress.com/2011/09/20/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/
    http://pamaran.wordpress.com/2011/09/28/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B5/

    http://www.facebook.com/profile.php?id=1614093607&sk=வால்
    கூடங்குளம் போராட்ட தலைவர்களின் வீடு முகவரிகள், செல்போன் விவரங்களை வெளியிட்டு அவர்கள் வீடுகளுக்குப் போய் சந்தேகங்களைக் கேட்கும்படி வாசக்ர்களை விஷமத்தனமாக தூண்டிவிட்டு சமூக விரோதச் செயலில் ஈடுபட்டிருக்கும் தினமலரை வன்மையாகக் கண்டிக்கிறேன். தினமலரின் விஷமனக்கள் பற்றி கேட்க விரும்புவோருக்காக தினமலரின் நிருபர்கள், ஆசிரியர்கள் உரிமையாளர்கள் வீட்டு முகவரிகளை இதே போல தினமல்ர் வெளியிடுமா? அணு உலைகள் பாதுகாப்பானவை என்று சொல்லும் அணு விஞ்ஞானிகளிடம் வீட்டுக்குப் போய் சந்தேகம் கேட்க அவர்கள் வீட்டு முகவரிகளையும் தினமலர் வெளியிடுமா ?

    http://www.vinavu.com/2011/11/23/koodankulam-seminar/
    http://www.vinavu.com/2010/09/15/nuclear-disaster/
    http://www.vinavu.com/2011/11/19/stop-koodankulam/
    http://www.vinavu.com/2011/10/04/indian-atomic-plan/

    http://gnani.net.in/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D/

  8. Kris says:

    உலகத்தில் விஞ்ஞானி என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் எவரும் செய்யத் துணியாத ஒரு பிரகடனத்தை செய்திருக்கிறீர்கள். கூடன்குளம் அணு உலை 100 சதவிகிதம் பாதுகாப்பானது என்று ! அணுத் தொழில்நுட்பம் 100 சதவிகிதம் பாதுகாப்பானது என்று எந்த அணு விஞ்ஞானியும் சொல்லமாட்டார். நீங்கள் அணு விஞ்ஞானி இல்லை என்பது எனக்குத் தெரியும். எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏரோநாட்டிகல் எஞ்சினீயரிங் படித்துவிட்டு ராக்கெட் விடுவது, ஆயுத ஏவுகணைகள் தயாரிப்பது முதலிய துறைகளில் வேலை பார்த்தவர் நீங்கள். அதிலும் பெரும்பாலும் உங்கள் வேலை நிர்வாக வேலை. ஆராய்ச்சி வேலை அல்ல. வேலை செய்யும் விஞ்ஞானிகளை மேற்பார்வையிடும் மேஸ்திரியாக இருந்தீர்கள். அணுகுண்டு தயாரிப்பதற்கு உதவி செய்தீர்கள். எனவே நீங்கள் அணுமின்சாரம் என்ற முகமூடியை பலமாக ஆதரிப்பீர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

    கூடன்குளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அணு உலைக்கு எதிராக நடத்தும் போராட்டத்தை ஒழித்துக் கட்ட மத்திய அரசு சாம, தான, பேத தண்ட முறைகள் அனைத்தையும் கையாளுகிறது. அதில் ஒன்றுதான் உங்களை ஏவிவிட்டிருப்பது. அணு ஆயுத, ராணுவ ஆதரவாளரான நீங்கள் அணு உலைக்கு எதிராகப் பேசுபவர்கள் மீது அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேறு சொல்லியிருக்கிறீர்கள்.உங்கள் விருப்பப்படி உதயகுமாரன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயத் தயாராக இருக்கிறது.

    அணு உலைகளை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களோ நாங்களோ ஒருபோதும் சொல்வதில்லை. ஏனென்றால் நாங்கள் காந்தியவாதிகள். அதுதான் நமக்குள் அடிப்படை வித்யாசம்.

    உங்களுக்கும் மத்திய அரசுக்கும் இருக்கும் பலத்தை பயன்படுத்தி பெரிய பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக உங்கள் ‘ஆராய்ச்சி’க் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறீர்கள். அதே அளவு இடத்தை எங்களுக்கு இந்த பத்திரிகைகளை ஒதுக்கமாட்டார்கள். ஒதுக்கினால், உங்கள் சாயங்களை வெளுத்துவிடுவோம் என்பது அவர்களுக்கும் தெரியும். நீங்கள் வெளியிட்டிருக்கிற அறிக்கைக் கட்டுரையில் பல முழு உண்மைகளை மறைக்கிறீர்கள். பல அரை உண்மைகளை அள்ளி வீசுகிறீர்கள். ஒவ்வொன்றாகப் பார்த்தால் இடம் போதாது. முடிந்த வரை இங்கே பார்ப்போம்.

    செர்னோபில் விபத்தில் 57 பேர் மட்டுமே இறந்ததாக சொல்லியிருக்கிறீர்கள். அதை விட அதிகமாக சாலை விபத்தில் பலர் சாவதாக ஒரு அபத்தமான் ஒப்பீடு செய்திருக்கிறீர்கள். சாலைவிபத்து ஏற்பட்டால், விமான, ரயில் விபத்து ஏற்பட்டால், சுற்றிலும் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மனித நடமாட்டமே அடுத்த பல வருடங்களுக்குக் கூடாது என்ற நிலைமை கிடையாது. ஆனால் அணுவிபத்து ஏற்பட்டால், அடுத்த தலைமுறை வரை தொடரும். செர்னோபில் விபத்தினால் ஏற்பட்ட கதிரியக்க பாதிப்புகளில் இரண்டாயிரம் பேர் வரை செத்திருக்கிறார்கள் என்பதுதானே முழு உண்மை. அதை ஏன் சொல்லாமல் கேன்சர் கேஸ்கள் என்று மழுப்புகிறீர்கள் ?

    1947லிருந்து 2008 வரை 76 அணு உலை விபத்துகள் உலகில் நடந்திருக்கின்றன. (இதில் 56 விபத்துகள் செர்னோபில்லுக்குப் பிறகு நடந்தவை.) அதாவது ஒவ்வோராண்டும் ஒரு பெரிய விபத்து. அதனால் ஏற்பட்ட உயிர், உடமை, வாழ்க்கை சேத நஷ்டங்களின் மதிப்பு மட்டும் வருடத்துக்கு சுமார் 332 மில்லியன் டாலர்கள். எம்.ஐ..டி என்ற உலகப் புகழ் பெற்ற நிறுவனம் ( நீங்கள் படித்த குரோம்பேட்டை எம்.ஐ.டி அல்ல) 2005லிருந்து 2055க்குள் உலகில் நான்கு பெரும் அணு விபத்துகள் நடக்கும் என்று முன்கூட்டியே கணித்திருந்தது. அதில் ஒன்றுதான் 2011ல் நடந்த புகோஷிமா விபத்து.

    விபத்து மட்டுமல்ல.அணு உலைகள் இயங்கும் இடங்களிலெல்லாம் கதிரியக்க ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. அதை மறுப்பவர் நீங்களும் உங்கள் கும்பலும் மட்டும்தான். அமெரிக்காவின் அணு உலைகள் இயங்கும் 65 இடங்களிலும் ரத்த, மூளை புற்று நோய்கள் அதிகரித்திருப்பதை அவர்களுடைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்கே கல்பாக்கத்தை சுற்றிலும் முறையான ஆய்வை சுதந்திரமான விஞ்ஞானிகள், மருத்துவர்களைக் கொண்டு நடத்த உங்கள் அரசும் அணுசக்தி நிர்வாகமும் ஏன் அனுமதிப்பதில்லை ?

  9. Kris says:

    இந்தியாவில் அணு உலைகளில் விபத்தே நடப்பதில்லை என்று இன்னொரு பொய் சொல்லியிருக்கிறீர்கள். உள்ளே என்ன நடக்கிறது என்பதை வெளியிடாம்ல் ரகசியமாக அல்லவா அணு சக்தி நிர்வாகம் இதுவரை இருக்கிறது ? அதுவேதான் நிர்வாகம், அதுவேதான் கண்காணிக்கும் உயர் அமைப்பு. குற்றவாளியே நீதிபதியாகவும் இருக்கும் வேறு எந்த துறையும் இந்தியாவில் இல்லை. உச்ச நீதி மன்றம் போல, கணக்குத் தணிக்கை அதிகாரி போல சுயேச்சையான் விசாரணை அமைப்பு அணுசக்தித் துறைக்கு இருந்தால்தானே உண்மைகள் வெளிவரமுடியும்? அப்படி ஒரு விசாரணைக்கு அந்த துறை தயாரா? அணு உலை அமைக்க இடம் தேர்வு செய்வது பற்றிய ஆய்வு முதல், ஊழியருக்கு கதிர் வீச்சு அளவு ஆய்வு வரை எந்த அறிக்கையையும் பகிரங்கப்படுத்த மறுப்பதுதானே வழக்கமாக இருக்கிறது ?

    ஒரு விபத்து நடந்து அது பற்றி பத்திரிகைகளில் செய்தி கசிந்து சூழல் ஆர்வலர்கள் குரலெழுப்பியபின்னர் ஒப்புக் கொள்வதுதான் அணுசக்தித் துறையின் வாடிக்கை. இப்படி கல்பாக்கத்தில் விபத்துகள் நடந்து ஆறு மாதம் கழித்து அவர்கள் ஒப்புக் கொண்ட சில விபத்துகள் இதோ: 1987- எரிபொருள் நிரப்பும்போது ரியாக்டரின் கோர் பகுதி சேதமடைந்தது. 1991- கன நீரின் கதிரியக்கத்தால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். 1999- 42 ஊழியர்களுக்கு கடும் கதிர்வீச்சு ஏற்பட்டது. 2002 – கதிரியக்கம் உள்ள 100 கிலோ சோடியம் காற்றுவெளிச்சூழலில் கலந்தது. 2003 – கடும் கதிர்வீச்சுக்கு 6 ஊழியர்கள் உள்ளானார்கள். ராஜஸ்தான் உலையில் 1991ல் கதிரியக்கம் உள்ள கனநீரை தவறாக ஒரு காண்ட்ராக்டர் பெயிண்ட் அடிக்க கலந்தார். அதிலேயே பெயிண்ட்டர்கள் முகம் கழுவினார்கள். கர்நாடக கைகா உலையில் 2009ல் கதிரியக்கம் உள்ள டிரிட்டியம் கல்ந்த நீரைக் குடித்த 55 ஊழியர்கள் பாதிக்கப்பட்டார்கள். கைகா ரியாக்டர் கட்டப்பட்டபோது 1994ல், கதிரியக்கம் வெளியேறாமல் தடுக்கும் வட்ட வடிவ டோம் உடைந்து நொறுங்கி 120 டன் கான்க்ரீட் கீழே விழுந்தது.இந்த விபத்து அணு உலை இயங்கத்தொடங்கிய பிறகு நடந்திருந்தால், குட்டி செர்னோபில்தான். அணுசக்தி துறையின் பொறியாளர்களுக்கும் கட்டட காண்ட்ராக்டர்களுக்கும் இருக்கும் “நெருக்கமான உறவினால்” டிசைன்களின் தரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால் இது ஏற்பட்டது என்று (நிஜமான) அணு விஞ்ஞானியும் அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் முன்னாள் தலைவருமான ஏ.கோபாலகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். அதாவது ஊழல் நடந்திருக்கிறது. இதே போன்ற ஊழல் இந்த வருடம் ஜூலையில் ரஷ்யாவில் நடந்தது. லெனின்கிராடில் அணு உலை கட்டுமானம் நடக்கும்போது தடுப்புக் கவச சுவர் கான்க்ரீட் நொறுங்கி விழ்நுதது. இந்த உலை கூடன்குளத்தில் ரஷ்யர்கள் அமைக்கும் உலையின் அடுத்த மாடல். ஊழல் மிகுந்த இந்தியாவில் எப்படி அணு உலை கட்டுமானம் பாதுகாப்பானது என்று நம்பமுடியும் ?

    இந்தியாவில் போதுமான யுரேனியம் இருக்கிறது என்று சொல்லும் நீங்கள் அது என்னவோ இலவம்பஞ்சு போல ஆபத்தில்லாமல் எட்டிப் பறிக்கும் பொருள் போல பேசுகிறீர்கள். யுரேனிய சுரங்க விபத்து, ஆபத்து பற்றி எதையும் உங்கள் கட்டுரையில் சொல்லவில்லை. இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாதுகோடா யுரேனிய சுரங்கப்பகுதியை சுற்றியுள்ல கிராமங்களில், மலட்டுத்தன்மை, புற்று நோய்கள், பிறவி ஊனம் எல்லாம் தேசிய சராசரியை விட அதிகமாகியிருப்பதை நோபல் பரிசு பெற்ற் உலக அமைப்பான அணுப்போருக்கு எதிரான் மருத்துவர் அமைப்பின் இந்தியக் கிளையின் ஆய்வு தெரிவித்திருக்கிறது.

  10. Kris says:

    ஒரு பிரச்சினை வருவதற்கு முன்பு அது வராது என்று சொல்வதும் வந்தபிறகு அதை முன்பே கவனித்துவிட்டோம் என்று சொல்வதும்தான் அணுசக்தி துறையின் வழக்கம். நவம்பர் 1986 கன நீர் அழுத்த அணு உலை பாதுகாப்பு பற்றிய அறிக்கையில் அணுசக்தி நிர்வாகம் சொல்லிற்று- ” இந்தியாவில் சுநாமிகள் வருவதில்லை. எனவே புயல்களை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறோம்.” ஆனால் 2004ல் சுநாமி கல்பாக்கத்துக்கு வந்தது. கல்பாக்கம் உலை சுநாமியைக் கணக்கிட்டு வடிவமைக்கப்பட்டதில்லை. தப்பியது அதிர்ஷ்டமே தவிர, நீங்கள் மெச்சும் அணு விஞ்ஞானிகளின் முன்யோசனையான பாதுகாப்பால் அல்ல.

    விபத்துக்கு பயந்தால் முன்னேறமுடியாது என்று ஒரு கருத்து சொல்கிறீர்கள். நீங்கள் விபத்துக்கு பயப்படாமல், கன நீரில் முகம் கழுவி, யுரேனியம் படுக்கையில் படுத்து ஆராய்ச்சி செய்து மேடம் கியூரியைப் போல நோபல் வாங்கிக் கொள்வதில் எங்களுக்கு ஒரு ஆட்சேபமும் இல்லை.ஆனால் ஒரு மக்கள் சமூகத்தையே அவர்கள் சம்மதம் இல்லாமல் ஆபத்துக்கு உட்படுத்த உங்களுக்கு துளிக் கூட உரிமை கிடையாது. ஆனால் கூடங்குளத்தில் அதைத்தான் செய்கிறீர்கள். நீங்கள் அதை நியாயப்படுத்துகிறீர்கள். எதிர்க்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்கிறீர்கள். என்ன அநியாயம் இது ?

    மக்கள் சம்மதத்தைப் பெறுவதற்காக 200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கச் சொல்கிறீர்கள். தரமான, பள்ளிக்கூடம், மருத்துவமனை, தொழிற்சாலைகள், வேலை வாய்ப்புகல், நான்குவழிச் சாலை எல்லாவற்றையும் கூடங்குளத்தை சுற்றியிருக்கும் கிராமங்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதாக வாக்குறுதி தருகிறீர்கள். அய்யா, இதையெல்லாம் அணு உலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் கிராமங்களுக்கு செய்வதுதானே அரசின் கடமை? அணு உலைக்கு சம்மதித்தால்தான் செய்வீர்களா? கல்பாக்கத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இதையெல்லாம் செய்திருக்கிறீர்களா? இல்லையே ? ஏன் இல்லை ? அங்கே எதிர்ப்பியக்கம் நடக்கவில்ல. எனவே லஞ்சம் கொடுக்க வில்லை, அல்லவா?

  11. Kris says:

    கூடங்குள அணு உலை எதிர்ப்புக்குப் பின்னால் அந்நிய சக்திகள் இருப்பதாக நீங்களும் பூச்சாண்டி காட்டியிருக்கிறீர்கள். உலகப் பொருளாதாரா ஏகாதிபத்ய சக்திகள் இந்தியா முன்னேறவிடாமல் தடுக்க இப்படி செய்வதாக் சொல்கிறீர்கள். அந்த சக்தி யார் ? அமெரிக்காதானே ? அது மன்மோகன் அரசுடன் போட்ட 123 ஒப்ப்ந்தத்தின் நோக்கம் இந்தியாவை முன்னேற்றுவதா? அமெரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளிடம் அணு உலைகளை வாங்க இந்தியாவை சம்மதிக்கவைத்த திட்டம்தானே அது ? அதில் எப்படி இந்தியா முன்னேறும் ? விபத்து ஏற்பட்டால் நஷ்ட ஈட்டை அணு உலை விற்ற கம்பெனி முழுக்க தரமுடியாது. இந்திய அரசே ஏற்கவேண்டும் என்று சொல்லும் ஒப்பந்தம்தானே அது ? அதை நீங்கள், ஏன் அய்யா அப்போது குடியரசுத்தலைவராக இல்லாதபோதும் எதிர்க்கவில்லை ? உலகப் பொருளாதார ஏகாதிபத்யத்துடன் அந்த ஒப்பந்தம் போடத் தடையாக இருந்த இந்திய இடதுசாரிகள் மன்மோகன் சிங் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தபோது, அதை முறியடிக்க முலாயம் சிங் யாதவின் உதவியை நீங்கள்தான் பெற்றுத் தந்தீர்கள், இல்லையா? கூடங்குளம் விஷயத்தில் மட்டும் 100சதவிகித தேசபக்தர் ஆனது எப்படி ? 123ல் மட்டும் அமெரிக்க ஆதரவாளராக இருந்தது எப்படி ?

    ஜெர்மனி அணு உலைகளை மூடுகிறது என்று நாங்கள் சுட்டிக் காட்டினால், அதற்குக் காரணம் அதனிடம் யுரேனியம் இல்லை என்றும் ஆனால் இந்தியாவிடம் போதுமான யுரேனியம் இருப்பதால் நமக்கு அணு உலைதான் லாபமானது என்றும் கதை விடுகிறீர்கள். அப்படியானால் ஏன் 123 ஒப்பந்தம் போட்டு நாம் யுரேனியத்தையும், அணு உலை இயந்திரங்களையும் வெளிநாடுகளில் வாங்க வேண்டும் ? ஏன் கூடங்குளத்துக்கு ரஷ்யாவிலிருந்து யுரேனியம் வரவேண்டும் ? நம்மிடமே இருக்கிறதே ?

    உங்கள் அசல் நோக்கம் மின்சாரமே அல்ல. அணுகுண்டுதான். மின்சார அணு உலைகளுக்கு வெளிநாட்டு யுரேனியம் வாங்கினால், நம்மிடம் உள்ள யுரேனியத்தை மொத்தமாக அணுகுண்டுகளுக்கு மட்டும் பயன்படுத்தலாம். வெளிநாட்டிலிருந்து வாங்கும் யுரேனியம் உள்ள உலைகள் மட்டும் சர்வதேச கண்காணிப்புக்கு உட்படும். நம் அணுகுண்டு உலைகள் கண்காணிப்பில் வராது என்பதுதானே அரசாங்கத்தின் திட்டம், இல்லையா?

    உங்கள் நீண்ட கட்டுரையில் ஒரே ஒரு விஷயத்தில்தான் ஏறக்குறைய முழு உண்மையை சொல்லியிருக்கிறீர்கள். சூரிய சக்தியும் காற்று சக்தியும்தான் முழுமையான தூய்மையான பசுமை சக்திகள். அவற்றுக்கு இந்தியாவில் மாபெரும் வாய்ப்புள்ளது என்பதுதான் அந்த உண்மை. ஆனால் அவற்றை நிலையானதாக நம்பமுடியாது என்று சொல்லி நல்ல பாலில் பத்து சதவிகிதம் கனநீர் கலந்துவிட்டீர்கள். ஜெர்மனி போன்ற நாடுகள் எல்லாம் இப்போதே 20 சதவிகிதம் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் பெறும்போது இங்கே ஏன் முடியாது ? உங்கள் விஞ்ஞான அறிவும் கோடானுகோடி ரூபாய்களும் அதற்கல்லவா செலவிடப்படவேண்டும்? சூரியசக்தியிலிருந்து 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் இங்கே சாத்தியம்.

    அவ்வளவு ஏன் ? இப்போது நாம் தயாரிக்கும் மின்சாரத்தில் 40 சதவிகிதத்தை சுமார் 72 ஆயிரம் மெகாவாட்டை விநியோகிக்கும்போதே இழந்துகொண்டிருக்கிறோம். ஸ்வீடன் நாட்டில் இந்த இழப்பு வெறும் 7 சதவிகிதம்தான். விநியோகத்தில் இழப்பை குறைக்க விஞ்ஞானிகள் வேலை செய்தாலே, சுமார் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் ந்மக்குக் கிடைத்துவிடும். கிராம மேம்பாட்டுக்காக புரா விடுகிறீர்களே. ஏன் ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனிலும் 10 மெகாவாட், 50 மெகாவாட் அளவில் மாற்று எரிசக்தி மூலம் மின் நிலையம் அமைத்து தன்னிறைவு பெறும் திட்டம் உங்கள் புராவில் இடம் பெறுவதில்லை ? ஏன் பிரும்மாண்டமான ஆபத்தான கோடிக்கணக்கில் விழுங்கும் அணுதிட்டங்களே உங்களுக்கு இனிக்கின்றன ?

    இந்த மாதம் 81 வது வயதில் நுழைந்துவிட்டீர்கள்.கடந்த 50 வருடங்களில் அணுசக்திதுறை அடுத்த இருபதாண்டு திட்டம் என்று சொன்ன எதுவும் அதன்படி நடக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். ஆனாலும் அரசு விஸ்வாசத்தினால், இந்த தள்ளாத வயதில் டெல்லி, நெல்லை, கூடங்குளம் என்று நீங்கள் அலைவது வருத்தமாக இருக்கிறது. வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தில் இருக்கிறீர்கள். அதிகபட்சம் இன்னும் 20 வருடங்கள். நூறைத் தாண்டி மனிதன் ஆரோக்கியமாகக வாழ்வது அரிது. உங்கள் நூற்றாண்டு வரும்போது இந்தியாவில் அணு மின்சாரம் நிச்சயம் மொத்த தேவையில் 10 சதவிகிதத்தைக் கூட பூர்த்தி செய்திராது. ஆனால் கோடிக்கணக்கான ரூபாய்கள் வீணாகியிருக்கும். லட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கையை நசுக்கியிருக்கும்.

  12. Kris says:

    கனவு காணச் சொல்வது உங்கள் வழக்கம். எங்கள் கனவு அமைதியான இயற்கையோடு இயைந்த பசுமை வாழ்க்கை. உங்கள் கனவில் என்ன வருமோ எனக்குத் தெரியாது. ஒரு கோரமான அணு விபத்தை இந்தியாவில் உங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்க்கும் கொடுமை உங்களுக்குக் கனவிலும் நேராமல் இருக்கட்டும்.

    இரவு படுக்கச் செல்லும் முன்பு ஒரு நிமிடம் யோசியுங்கள். அணுஉலைகள் குண்டு தயாரித்தாலும் மின்சாரம் தயாரித்தாலும் அவை மக்கள் நலனுக்கு எதிரானவை என்பது உங்கள் மனசாட்சிக்கு நிச்சயம் நன்றாகத் தெரியும். அணு மின்சாரம் ஆயுத திட்டத்தின் ஒரு முகமூடி மட்டும்தான்.
    மின்சாரம்தான் உண்மையான நோக்கம் என்றால் உங்களுக்குப் பிடித்தமான் காயத்ரி மந்திரத்தைப் பின்பற்றுவீர்கள். பாரதி வார்த்தையில் அதை நினைவுபடுத்துகிறேன். செங்கதிர் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம். அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக.

    அன்புடன்
    ஞாநி

    கல்கி 12.1.11 இதழில் சுருக்கப்பட்ட வடிவம் வெளியாகியுள்ளது.

  13. Kris says:

    ஞானியின் கேள்விகளுக்கு உங்களன் பதில் என்ன? நான் ஏற்கனவே தினமணி தலையங்கத்தினை படித்துவிட்டேன்.

  14. Kris says:

    குருமூர்த்திக்கு விழுந்த பின்னூட்டங்களையும் படித்தீர்களா?

  15. Kris says:

    நிபுணர்குழு உறுதி செய்துவிட்டது என்று ஒரு வரியில் கடந்து செல்லவேண்டாமே! மும்பை தீவிரவாத தாக்குதலின் போது (bullet proof) கவச உடை வாங்கியதில் உள்ள ஊழல்கள் வெளிவந்து சரித்தது உங்களுக்கு தெரியாதா? தேசத்துரோகம் பற்றி பேசுகிறீர்கள் நமது அரசியல் வாதிகள் மற்றும் அரசு நேர்மையானதா?

  16. Harish.M says:

    நண்பரே உங்கள் கேள்விகளுக்கு பதில் இந்த இணைப்பில் இருக்கிறது.

    http://www.mediafire.com/?1vfp84503u9c3w4

    http://www.mediafire.com/?mci4h7d4q7xk8ti


    இது நிபுணர் குழு அளித்த சில விளக்கங்கள்.அணு உலையில் பின்பற்றப்படும் தொழில்நுட்பம் குறித்த அவர்களின் விளக்கம் இது.இந்த விளக்கம் போதுமான அளவு தகவல்களை தருகிறது.மீண்டும் மீண்டும் சுனாமி பூகம்பம் அணு விபத்து என்று கேட்பதில் அர்த்தமில்லை.ஞானி அவர்களின் அப்துல் கலாம் பற்றிய கருத்துக்களுக்கு நான் விளக்கமளிக்க விரும்பவில்லை. நாட்டு மக்களின் மீது துளி கூட அக்கரயிள்ளதவர் போல் நினைத்து தான் மட்டுமே தேச தியாகி என்பது போல் நினைத்துக் கொண்டு ஞானி அவர்கள் கேட்டிருக்கும் கேள்விக்கு நாம் பதில் கூற விரும்பவில்லை.விஞ்ஞானி சொல்வதைக் கேட்க மாட்டேன் ஞானி சொல்வதைத் தான் கேட்பேன் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் விருப்பம்.

    நான் முன்பே கூறியதைப் போல என் கருத்துக்களை அனைவரும் ஏற்க வேண்டுமென்றில்லை.என் பதிவுகள் குறித்த உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.படிப்பவர்கள் இந்த விவாதத்தையும் கூட படிப்பார்கள்.எது சரி என்று படுகிறதோ அதை அவர்கள் ஆதரிக்கப் போகிறார்கள்.ஆகையால் என் கருத்து இந்த அணு மின் நிலையம் செயல்படத் துவங்க வேண்டுமென்பது.

    எங்களின் பதிவுகளுக்கு தொடர்ந்து பதில் கொடுத்து ஆதரவளித்து வருவதற்கு மிக்க நன்றி.தொடர்ந்து படியுங்கள்.

  17. Kris says:

    துக்ளக்கை பதிலாக கொடுத்தமைக்கு நன்றி. நான் முன்பே கூறியதுபோல, எனக்கு மின்னுற்பத்தி மற்றும் பராமரிப்பு துறையில் ஆறு வருடங்கள் அனுபவம் உள்ளது நீங்கள் கொடுக்கும் துக்ளக் ஏட்டில் நீராவி எந்திரம் (Steam turbine) ஐ கொண்டு இயங்கும் பம்புகள் (pumps) பற்றி எதுவும் இல்லை அவற்றை கொண்டு மின்சாரம் இல்லாமல் நீர் செலுத்தி குளிர்விக்க முடியும் (விபத்து நிகழ்ந்து மின்னுற்பத்தி இல்லாதபோது). அடிப்படையில் நான் ஒரு கருவியியல் பட்டதாரி. எனக்கு பத்து வருடங்களுக்கு மேலாக பல்வேறு தொழிற்சாலைகளின் கட்டுபாட்டு தொழில் நுட்பங்கள் பரிச்சயம் (field instrumentation to Automation architecture, safety interlocks and ESD(Emergency shutdown) systems ) உண்டு . தொழில் நுட்பம் பத்து ஆண்டுகளில் வளர்த்துள்ளது ஆனால் நூறு சத உத்திரவாதம் எங்கும் இல்லை. ஒரு சாதாரண விபத்து ஏற்படுத்தும் பாதிப்பிற்கும் அனுவிபத்திற்கும் ம்குந்த வேறுபாடு உள்ளது அதனை நான் சொல்லி தெரிய வேண்டியதில்ல. துக்ளக் சொல்லும் கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. மன்னிக்கவும்.

  18. Kris says:

    கலாம் ஒரு விஞ்ஞானி என்று நானும் நம்பி இருந்தேன் ஐந்து ஆண்டுகளுக்கு முன் வரை. அவரது சுய சரிதையை படித்த பின்னரே அது மாயை என்பதை உணர்ந்தேன். நீங்கள் படித்திருக்கிறீர்களா? மேலும் ஞானிக்கு நீங்கள் பதில் சொல்லமுடியாது என்னும்போதே தெரிகிறது உங்கள் விஞ்ஞான (கலாம்) பக்தி. உங்களை நடுநிலையாக இருந்து பார்க்க மட்டுமே சொல்கிறேன். ஞானி மட்டுமல்ல இன்னும் நிறைய சுட்டிகளை கொடுத்தேன் அதற்கு உங்கள் எதிர் வினை என்ன? முக்கியமாக கலாம் சொன்ன செர்நேபிய உலை விபத்தின் இழப்பு தகவல் மிகவும் மட்டமான பொய். அதை பற்றி நீங்களே தேடி தெரிந்துகொள்ளலாம். வேண்டுமென்றால் நான் உதவுகிறேன்.
    தயவு செய்து அரசின் நிபுணர் குழுவை தூக்கி குப்பையில் போடுங்கள். நீங்களே களத்தில் இறங்கி பாருங்கள் பராமரிப்பு (maintenance) பணியில் உள்ள நண்பர்களை கேளுங்கள் அவர்கள் எந்த துறை / தொழிற்சாலையில் இருந்தாலும் சரி, சிறு விபத்துக்கள் கூட நிகழாமல் இருக்கிறதா என கேட்டுபாருங்கள் பிறகு சொல்லுங்கள். காவலர்களுக்கு கவச உடை வாங்கின கதை தெர்யுமா தெரியாதா சொல்லுங்கள்?

  19. Kris says:

    Look at this too
    http://savukku.net/hotnews/1393-2011-12-02-07-18-41.html